கவிதைகளின் காதலன்
Sunday, December 28, 2008
உனக்காக
மரணம்
வருமென்று தெரிந்திருந்தால்
உனை பார்த்திருக்க மாட்டேன்
உனை பார்ப்பதி்ல்லை
என்று இருந்திருந்தால்
நான் பிறந்திருக்கவே மாட்டேன்......
Wednesday, November 19, 2008
என் மனம் போல்
பாலவனத்தில்
ஒரு பூஞ்சோலையோ...
என்னால் முடியாது
எனை இழக்க
பார்த்தாய்..
இப்பொழுது
நான் எதை
இழக்க சிரிக்கின்றாய்....
Tuesday, November 18, 2008
நானே தான்
பயப்பட வேண்டாம்
உனை பார்த்துதான்
உருகிவிட்டேன்
உயிரை மட்டுமாவது
விட்டுவை.
எதாவது ஒன்றை
தேடிக் கொடு
தொலைந்த என் இதயத்தை
இல்லை
திருடிய அவளை
காத்திருக்கிறேன்
தாயின் இறுதிசடங்கு
ஆனாலும் காத்திருக்கிறேன்
உன்னிடமிருந்து வரும்
ஒரு போனுக்காக...
கண்டுபிடித்துவிட்டேன்
அப்பாவி பெண்ணே
எனைப் பார்த்ததும்
நானும் உன்
நளினத்தை பார்த்துவிட்டேன்
அனைத்தையும் விளக்கிவிட்டு
வெளியே வா.
உன் படமாவது
நீ தான்
எனை நினைத்து
ஏங்குவதில்லை
உன் புகைப்படமாவது
எனை நினைத்து ஏங்குவது போல்
இருக்கட்டுமே என்றுதான்
இப்படி வரைந்தேன்.
அவளையும்
என்னவளையும்
இப்படித்தான் தாங்கிக்கொண்டேன்
ஏனோ தெரியவில்லை
எனைவிட்டு போய்விட்டாள்
கேட்டாள்
"நடக்க தெரியும் என்கிறாள்"
பாவம் என் மனதிற்குத்தான்
அவள் நினைவுகளைவிட்டு நகரவே தெரியவில்லை
என்னவளே
நான் உனை தழுவியிருக்கும்
காற்றாயிருக்கிறேன்
நீ உனை சுட்டெறிக்கும்
சூரியனய் ஏனடி
காதலிக்கிறாய்
பெண்ணே
முகத்தை காட்டும் முன்
கொஞ்சம் பொறு
உன் காலில் தொலைத்த
இதயத்தை தேடிக் கொள்கிறேன்....
Sunday, November 16, 2008
வன்முறை கூடாதென்று
விளக்கேற்றுவர்
எனைக்கொளுத்தி!
இது என் காதலியின் தோட்டம்
கடவுளுக்கே இங்கு இடமில்லை
உனக்கு மட்டு்ம் என்ன போய்விடு!
Saturday, November 15, 2008
உனை பார்த்ததால்
உனை போன்ற பெண்களை
அழகி என்று கூறுவதை விட
ஆட்கொள்ளிகள் என்று கூறுவதை சரி....
என்னை அறியாமல்
விலகிச் செல்லும்
உனை துரத்தியே
எனை இழக்கப் போகிறேன்...
உலகம்
புற்களே
என் காலடியில்
மிதிபடுவதை நினைத்து
கவலைப்பட வேண்டாம்
உங்கள் காலடியில்
மிதிபடும் மன்ணை நினைத்து
பெருமைப்படுங்கள்....
Friday, November 14, 2008
அவளும் ரோஜாவும்
நீ சிரித்து
இந்த ரோஜாவிற்கு
மலர கற்றுக் கொடுக்கிறாயோ?
உன் இதழ் போல் சிரிக்கும்
ரோஜா இதழைத்தான்
கான்பித்தாய்
உன் மனம் போல் குத்தும்
முள்ளை ஏனடி
கான்பிக்க மறந்துவிட்டாய்।
சின்ன பூவே
அவளிடம் மெல்ல பேசு
நான் அனுப்பிய ஆள் நீ என்று
தெரியப்போகிறது
.
Wednesday, February 6, 2008
என்னுடய முதல் கவிதை "வெற்றி"
தோல்விகளே..
என்னை துரத்துங்கள்
நான்
வெற்றிப்படிகளில்
ஏறவேண்டும்
வெற்றிகளே
என்னைவிட்டு
தூரம் செல்லுங்கள்
நான் உங்களை
துரத்தித்தான்
பிடிக்க வேண்டும்
ரவிதா
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)